2015 ஜெனீவா பிரேரணைக்கு எந்தவித திருத்தங்களும் இன்றி இணை அனுசரணை வழங்கப்பட்டமையானது 2017இல் பாரதூரமான ஒன்று என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கம் ஏற்று கொண்டுள்ள இந்த அறிக்கையானது ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட செயன்முறைகளுக்கமைய ஸ்தாபிக்கப்பட்ட ஆணைக்குழு ஒன்றின் விசாரணை அறிக்கை அல்லவென அவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை ஆணையகம் தொடர்பில் உறுப்பு நாடுகள் ஏமாற்றத்துடன் உள்ள காலகட்டத்தில் முப்படையினர் மீது யுத்த குற்றச்சாட்டுக்களை சுமத்தும் குறித்த அறிக்கைக்கு எதிர்ப்பு மற்றும் திருத்தமின்றி ஏற்று கொள்ளப்படுகின்றமையானது நாட்டை காட்டிக் கொடுக்கும் செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

