முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ விஷேட புலமை பரிசில் ஒன்றை வழங்க சிங்கப்பூரின் எஸ் ராஜரத்னம் சர்வதேச கல்வி நிறுவகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிறுவகம் அரச பாதுகாப்பு மற்றும் வழிகாட்டல் கல்வி நிறுவனமாக செயற்படுகின்றது.
இதற்கமைய ஒரு மாத கால கற்றல் செயற்பாடுகளுக்காக சிங்கப்பூருக்கு வருகை தருமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த அழைப்புக்கு அமைய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

