கீத் நொயார் தாக்கப்பட்ட விடயம் – விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 6 இராணுவ புலனாய்வு பிரிவு உறுப்பினர்களும் பிணை

320 0

ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்;டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 6 இராணுவ புலனாய்வு பிரிவு உறுப்பினர்களும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்கிசை நீதவான் இந்த பிணை வழங்கல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதற்கமைய ஒருவர் தலா 10 லட்ச ரூபா வீதம் சரீர பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வழக்கு மீண்டும் ஜூன் மாதம் முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது.

முதல் சந்தேகத்துக்குரியவரான இராணுவ மேஜரை தவிர ஏனைய 5 பேரும் அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.