நீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு – இன்று ஆரம்பம்

308 0

நீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு பெற்று கொடுக்கும் நோக்கில் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு நீர் தாங்கிகளை பகிர்ந்தளிக்கும் செயற்திட்டம் இன்று ஆரம்பமானது.

இது தொடர்பான நிகழ்வு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் இடம்பெற்றது.

முதற்கட்டமாக 10 நீர் தாங்கிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

வரட்சி காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலே இந்த செயற்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, வரட்சி காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள 14 மாவட்டங்களுக்குட்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு ஊழவு இயந்திரங்களுடன் நீர் தாங்கிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.