எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர், விவசாயிகளுக்கான நட்டஈட்டை அரசாங்கம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை கமத்தொழில் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
நாட்டில் நிலவிய வரட்சியான காலநிலை காரணமாக, பாதிக்கபபட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதாக அரசாங்கம் அறிவித்தது.
இந்த நிலையில், குறித்து நட்டஈட்டை உரிய காலத்துக்குள் வழங்காவிட்டால், எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாக அகில இலங்கை கமத்தொழில் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

