மாணவர்கள் போதைவஸ்து மற்றும் புகைத்தலை நிறுத்துவதன் மூலம் கல்வி வளற்சியை மேலும் அதிகரிக்க முடியும்- மாவை(காணொளி)

359 0

மாணவர்கள் போதைவஸ்து மற்றும் புகைத்தலை நிறுத்துவதன் மூலம் கல்வி வளற்சியை மேலும் அதிகரிக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா குறிப்பிட்டார்.

எமது முன்னைய அரசியல் தலைவர்கள் மதுபானம் மற்றும் புகைத்தலின் மூலம் அரசாங்கத்திற்கு கூடுதலான வருமானம் கிடைப்பதை அறிந்து அடையாளமாக அவற்றை பாவிப்பதை நிறுத்தியுள்ளார்கள்.

தற்போது திறைசேரிக்குரிய கூடுதலான வருமானம் மதுபானங்களின் மூலம் யாழ்ப்பாணத்திலிருந்து வருவதாக நிதி அமைச்சர் மற்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

எனவே இளைஞர்கள் மதுபானம், புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனையை நிறுத்துவதற்கு மனதில் மாற்றத்தினைக் கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.