பசிலுக்கு எதிரான வழக்கை வேறு நீதிபதியின் பெயருக்கு மாற்ற அனுமதி

216 0

கடந்த அரசாங்க காலத்தில் திவிநெகும (வாழ்வெழுச்சித் திட்டம்) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட கூரைத் தகடு விநியோகத்தின் போது சுமார் மூன்றரைக் கோடி ரூபா மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் வழக்கு எதிர்வரும் மே 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் பிரதிவாதிகளாக பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர்.ஏ.பீ. ரணவக்க உட்பட நான்கு பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.

கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கை வேறு ஒரு நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் சட்டத்தரணிகளினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வழக்கு விசாரணைகள் உயர் நீதிமன்றத்தின்  வேறு நீதிபதியொருவருக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது