யாழ்ப்பாணம் தொண்டமனாறு பகுதியில் இருந்து பருத்தித்துறை பகுதி நோக்கி ஐக்கிய நாடுகள்சபை (UN) கொடி கட்டப்பட்ட இராணுவ வாகனதொடரணி 27 காலை 11 மணியளவில் பயணித்ததனால் ஐ.நா படை யாழ்ப்பாணம் வந்துவிட்டதோ என மக்கள் ஆரவரமடைந்தனர்.
இந்த வாகனங்கள் நீண்ட காலத்தின் பின்னர் இவ்வாறு இப்பகுதியில் திடிரென உட்பிரவேசித்து தொடராக சென்ற காரணத்தினால் மக்கள் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அத்துடன் இவ் இராணுவ வாகனத் தொடரணி சென்றமையினால் பொதுப்போக்குவரத்து சிறிது பாதிக்கப்பட்டிருந்தது.
மேலும் குறித்த வாகனங்கள் எங்கு இருந்து வந்தது.எதற்காக வந்தது என்கின்ற விடயங்கள் இன்னும் புதிராகவே உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் இவ்வாகன தொடரணி கடந்த கால யுத்த நிலைமையை ஞாபகப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.



