சில இடங்களில் நீர் விநியோகத்தில் சிக்கல்

555 0

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் நேற்று 15 மணிநேரம் தடை செய்யப்பட்ட நீர் விநியோகம் இன்னும் சில இடங்களில் உரிய முறையில் விநியோகிக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபையிடம் வினவிய போது, சில இடங்களில் குறைந்த அழுத்த நிலையில் நீர் வழங்கப்படுவதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று காலை 9.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணிவரை கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்ஸை, கோட்டை, கடுவலை மாநகர சபை பிரதேசங்கள் மற்றும் மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, முல்லேரியா மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்பட்டிருந்தது.