மின் அஞ்சல் ஊடாக வைரஸ்

278 0

மின் அஞ்சல் ஊடாக கணனிக்குள் வைரஸ் நுழையக்கூடிய அபாயம் இருப்பதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை அணி தெரிவித்துள்ளது.

இந்த வைரஸின் ஊடாக கணனியில் உள்ள அனைத்து தரவுகளும் அழியக்கூடிய ஆபத்து உள்ளதாக அதன் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

இதனால் மின் அஞ்சல் ஊடாக பெறப்படும் தகவல்களை திறக்கும் போது அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.