விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்களை பரிசோதனை செய்யுமாறு ஆலோசனை

340 0

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு பூராகவும் அமைந்துள்ள விற்பனை நிலையங்கள் மற்றும் உணவகங்களை பரிசோதனை செய்யுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, பொது சுகாதார பரிசோதகரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்துடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி புறக்கோட்டை பிரதேசம் மற்றும் நாடு பூராகவும் அமைந்துள்ள களஞ்சியசாலைகளுடன், தூர சேவை பேருந்துகள் நிறுத்தும் இடங்களில் அமைந்துள்ள உணவகங்களும் பரிசோதனை செய்யப்படவுள்ளது.