மத்திய மாகாணத்தில் எனப்படும் பன்றிக்காய்ச்சல் தீவிரமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாணத்தில் இதுவரை 204 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சமார் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களுள் கர்ப்பிணிப் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக மத்திய மாகாண வைத்தியதுறை பணிப்பாளர் வைத்தியர் சாந்தி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், புத்தளம், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை உள்ளிட்ட பிரதேசங்களிலும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

