அவுஸ்திரேலியா – குயின்ஸ்லாந்து பகுதியில் வீசிய சூறாவளியினை அடுத்து அங்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை குறித்த பிரதேசத்தில் 60,000 பேர் வரை மின்சாரம் இல்லாமல் பரிதவிப்பதாகவும், மரங்கள் வீதிகளில் முறிந்து விழுந்துள்ளமையினால் போக்குவரத்துக்கள் பாதிப்புற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அனர்த்தத்தினால் குயின்ஸ்லாந்து பகுதியில் ஏற்பட்ட சொத்து இழப்புக்கள் குறித்து ஆராய அவுஸ்திரேலிய அவசர இராணுவப்பிரிவினர் அனுப்பப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை குறித்த சூறாவளியினால் குயின்ஸ்லாந்தின் கடற்பகுதிகளை அண்மித்த பகுதிகளில் இருந்து சுமார் 25,000 பேர் வரை அப்புறப்படுத்தப்பட்டுள்ளதுடன்,சூறாவளியினையடுத்து இந்தப் பகுதியில் 250 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவுஸ்திரேலிய காலநிலை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

