தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள விமல்

351 0

பிணையில் விடுவிக்கக் கோரி வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணா விரத போராட்டத்தை ஆரம்பித்து, சிறைச்சாலை மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளதால், சிறைச்சாலை ஆணையாளரால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விமல் வீரவன்ஸ கடந்த 22ஆம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டத்திர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.