சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐரோப்பாவுக்கு விஜயம்

363 0

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐரோப்பாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஐரோப்பா மால்டாவில் இடம்பெறவுள்ள உலகளாவிய தலைமைத்துவ அமைப்பின் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே முன்னாள் ஜனாதிபதி ஐரோப்பா சென்றுள்ளார்.

உலகளாவிய தலைமைத்துவ அமைப்பின் உறுப்பினராக இருக்கின்றமையாலேயே குறித்த மாநாட்டில் பங்கு கொள்வதற்னகாக சந்திரிக்கா மால்டோ பயணித்துள்ளார்.

இந்த மாநாடு நோபல் பரிசு பெற்ற எப்.டப்ள்யூ.டி.கிளர்கின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

நிர்வாக பன்முகத்தன்மை மற்றும் தீவிரவாத போராட்டம் தொடர்பில் மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.