நில மீட்பு அதிகாரத்தில் ஜனதிபதி வழங்கிய வாக்குறுதிகள் செல்லாக்காசுகளாக மாறிவிட்டது. வர்த்தமானி அறிவித்ததலில் வெளியிடப்பட்டதனை போல நல்லாட்சியின் அரசியல் போக்கு அமையவில்லை என முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரீஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த அரசின் ஆட்சி காலத்தின் போது ராஜித சேனாரத்ன ஒரு தீர்க்கமான சபதமொன்றை முன்வைத்திருந்தார். நாட்டில் நோய்கள் தொடர்பிலும் சுகாதாரம் தொடர்பிலும், அரசாங்கம் கரிசணை காட்டவில்லை என தெரிவித்திருந்தார்.ஆனால் இன்று சுகாதார அமைச்சுப்பதவி கிடைத்தும் நாட்டில் ஆறில் ஐந்து பங்கு நோய்களின் தாக்கத்தை கட்டுப்படுத்தாதது ஏன்..? என நான் கேள்வி எழுப்புகின்றேன்.
மைத்திரிபால சிறிசேனவினால் சிறந்ததொரு ஆட்சியமைப்பை ஏற்படுத்த முடியும். ஆனால் அவர் தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருகிறார்.அனைத்து மக்களுக்கும் சமமான நீதியை வழங்கி பாரபட்சமின்றி ஆட்சி நடவடிக்கையினை கொண்டு செல்ல வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

