ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேனவுக்கு போட்டியாக அச்சுறுத்தலாக இருக்கமாட்டார்

290 0

அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேனவுக்கு போட்டியாக அச்சுறுத்தலாக இருக்கமாட்டார்.

ஏனெனில் இறுதி வெற்றியை தீர்மானிக்கும் வாக்குகளான வடக்கு கிழக்கு வாக்குகள் கோத்தபாயவுக்கு கிடைக்கப்போவதில்லை என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய இன்று தெரிவித்துள்ளார்.கோத்தபாய ராஜபக்ச ஒரு இராணுவ அதிகாரி மட்டுமே, அவரால் மைத்திரிபால சிறிசேனவைப் போன்று அரசியல்வாதியாக செயற்படமுடியாது.

எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாட்டு மக்கள் மத்தியில் கவர்ச்சியை கொண்டிருக்க வேண்டும் என்றும் தேவப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.தென்னிலங்கை மக்கள் வாக்குகள் கடந்த தேர்தலில் பிரிந்து போயின. எனவே வேட்பாளர் ஒருவர் அனைத்து இன மக்களின் மதிப்பையும் பெறவேண்டும்.

இந்தநிலையில் 2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சொத்தாக தேர்தலில் போட்டியிடவுள்ளார்.