கடந்த 2008ஆம் ஆண்டு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் 12 பேர் உயிரிழக்க காரணமாக அமைந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு உடந்தையாக செயற்பட்டவருக்கு, 20 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் கனகசபை தேவதாசன் என்பவருக்கு நீதிபதி பியசேன ரணசிங்கவால் இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3ஆம் நாள் இடம்பெற்ற இத் தற்கொலை குண்டுத் தாக்குதலில் கொழும்பு டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரியின் 8 மாணவர்கள் உள்ளிட்ட 12 பேர் கொல்லப்பட்டனர்.
குறித்த தாக்குதலுக்கான திட்டத்தை வகுத்தமை மற்றும் தாக்குதல் நடத்திய பெண் போராளிக்கு அடைக்கலம் வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக இத் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

