கேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது

358 0

ஒரு தொகை கேரளா கஞ்சா விநியோகம் செய்துகொண்டிருந்த நான்கு பேர் ஆனமடுவ, நவகத்தேகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல் ஒன்றின்படி பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடக பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் சமிந்த வலாகுலுகே கூறினார்.

இதன்போது வேன் ஒன்றில் விநியோகம் செய்து கொண்டிருந்த 05 கிலோகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் கூறினார்.