வெளிநாட்டு தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி நிதி மோசடி செய்துள்ள நபர் ஒருவர் கைது

314 0

வெளிநாட்டு தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி நிதி மோசடி செய்துள்ள நபர் ஒருவர் மொரட்டுவ தபால் நிலையத்தின் அருகாமையில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடம் இருந்து 2 தேசிய அடையாள அட்டைகளை காவற்துறை கைப்பற்றியுள்ளது.

நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று மொரட்டுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.