எஸ்.எல்.எஸ் தலைக்கவசங்களின் தரநிலைகளில் பெரும் பிரச்சினை

344 0
ஸ்.எல்.எஸ் தரச்சான்றிதழின் கிழ் சந்தைக்கு வந்துள்ள பாதுகாப்பான தலைக்கவசங்களின் தரநிலைகளில் பெரும் பிரச்சினை இருப்பதாக அனைத்து இலங்கை உந்துருளி செலுத்துனர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.தற்போது சந்தையில் காணப்படும் பாதுகாப்பு தலைக்கவசங்களை அணியும் போது உந்துருளி செலுத்துனர்களின் தலைக்கு கடினமாகவுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் சிரத் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இதனால் உந்துருளி செலுத்துனர்களின் கவனம் வேறு இடத்திற்கு செல்வதால் விபத்து ஏற்படக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.