கீத் நொயாரை கடத்திய வெள்ளை வேன் மூலமே லசந்தவின் கொலையும் இடம்பெற்றிருக்கலாம்

320 0

ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை வேன் மூலமே லசந்தவின் கொலையும் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் வெள்ளை வேனை, ஹோமாகம பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்றைய தினம் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே, லசந்தவின் கொலையும் இந்த வேன் மூலம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.கீத் நொயார் கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி கடத்தி செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில், மீட்கப்பட்ட வெள்ளை வேன் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.