யாழ். மாவட்டத்திற்கு இந்த ஆண்டிற்கான வீட்டுத்திட்டமாக மீள்குடியேற்ற அமைச்சின் 8 லட்சம் ரூபா பெறுமதியான கல் வீடுகளில் ஆயிரம் வீடுகள் மட்டுமே தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.இது தொடர்பில் அரச அதிபர் மேலும் தெரிவிக்கையில் ,
யாழ். மாவட்டத்திற்கு இந்த ஆண்டிற்கான வீட்டுத்திட்டமாக மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக வழங்கப்படும் திட்டத்தின் கீழ் 8 லட்சம் ரூபா பெறுமதியான கல் வீடுகளில் ஆயிரம் வீடுகள் மட்டுமே தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அதன் பிரகாரம் அதற்கான பணிகள் முன்னெடுக கப்படுகின்றது.
பிரதமரின் செயலாளர் பாஸ்கரலிங கம் தலமையில் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்படி அனுமதி கிடைத்தது. அத்துடன் 2016ம் ஆண்டில் யாழ் மாவட்டத்திற்கு மட்டும் வழமையான தீட்டத்தின் கீழ் 3 ஆயிரம் வீடுகளும் புதிதாக மீள் குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளிற்காக மேலும் ஆயிரம் வீடுகளும் கிடைத்திருந்தன.
இந்த ஆண்டும் கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட 3 ஆயிரம் வீடுகள்போன்று இந்த ஆண்டும் எம்மாலும் ஏனையோராலும் கோறப்பட்டவையானது உண்மையான விடயமே இருப்பினும் தற்போது ஆயிரம் வீடுகள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளது. என்றார்.-

