ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க வௌிநாடு செல்வதற்கு அனுமதி கேட்டிருந்த வழக்கை ஏப்ரல் மாதம் 03ம் திகதி விசாரணைக்கு எடுப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதம் 10ம் திகதி முதல் 28ம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் இருக்கும் தனது மகளை பார்க்க செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி, திஸ்ஸ அத்தனாயக்கவால் மீள் பரிசீலனை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.
போலி ஆவணங்களை தயார் செய்த குற்றச்சாட்டில் பிணை வழங்கப்பட்டுள்ள க்கிய தேசிய கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்கவிற்கு வௌிநாடு செல்ல தடைவிதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை கூறத்தக்கது.

