காணாமல் போனோரது உறவினர்களது போராட்டம் தொடர்ந்து பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பல தினங்களாக அவர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை நேற்றையதினம் காணாமல் போனோரின் உறவினர்களது பிரதிநிதிகள், வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன்போது வடமாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
காணாமல் போனோர் விடயத்தில் அடுத்தகட்டமாக எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் கேப்பாபுலவு, வலிகாமம் வடக்கு, மன்னார் – முள்ளிக்குளம் போன்ற பகுதிகளில் நிலமீட்பு போராட்டங்களும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
அத்துடன் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை மாட்டங்களில் தொழிலற்ற பட்டதாரிகள் தங்களின் தொடர்ச்சியான போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
தங்களுக்கான நிரந்தர தொழில்வாய்ப்பை கோரி இந்த போராட்டங்கள் இடம்பெறுகின்றன.
இந்த விடயத்தை வலியுறுத்தி நேற்றையதினம் மன்னாரில் தொழிலற்ற பட்டதாரிகள் போராட்டம் ஒன்றை நடத்தி இருந்தார்கள்.
அதேநேரம், தனியார்துறையினருக்கு அரச பெருந்தோட்டத்துறை காணிகள் பகிரப்படுகின்றமைக்கு எதிராக கண்டி உன்னஸ்கிரியவில் போராட்டம் நடத்தப்படுகிறது.

