அவுஸ்திரேலியாவில் டெபி சூறாவளி தாக்கியதை அடுத்து அந்த நாட்டில் அனர்த்தநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு அவுஸ்திரேலியாவில் இந்த சூறாவளி கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயிரக் கணக்கான கட்டிடங்கள் மின்சார விநியோகத்தை இழந்துள்ளன.
இதுவரையில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மீட்பு பணிகளுக்காக உலங்குவானூர்திகளும், படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

