வடக்கு கிழக்கு மீள இணைக்கப்பட்டால், முஸ்லிம்களுக்கான தனி மாகாண சபை உருவாக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் ரவுப் ஹக்கீம் இதனை தெரிவித்துள்ளார்.
அரசியல் ரீதியான அதிகாரப் பகிர்வு அவசியமானது.
வடக்கு கிழக்கு இணைக்கப்படாமல் தனித்திருக்குமாக இருந்தால் முஸ்லிம்களுக்கான தனி மாகாண கோரிக்கை எழாது.
ஆனால் இரண்டு மாகாணங்களும்ஒன்றிணைக்கப்படும் பட்சத்தில், முஸ்லிம்களுக்கு தனி மாகாண நிர்வாகம் கோரப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

