புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்களை அறிவுறுத்தும் நிகழ்வுக்கு வருகை தந்தவர்கள் கட்டுக்கடங்காத முறையில் செயற்பட்டதனால் பொலிஸார் தலையிட்டு அவர்களை அப்புறப்படுத்திய நிகழ்வொன்று நேற்று காலியில் இடம்பெற்றுள்ளது.
காலி விளையாட்டு ஸ்டேடியத்தில் பிரஜைகள் ஒன்றியம் எனும் அமைப்பினால் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில், பிரதான பேச்சாளராக கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கலந்துகொண்டுள்ளார். அத்துடன், புதிய அரசியலமைப்பு சபையின் தலைவர் லால் விஜேநாயக்கவும் இதில் கலந்துகொண்டுள்ளார்.
பிரதான பேச்சாளரின் உரை நிறைவடைந்து, பொது மக்களின் கருத்துக்கு நேரம் ஒதுக்கப்பட்ட போது சிலர் கூட்டத்தைக் குழப்ப ஆரம்பித்துள்ளதாகவும் பின்னர் பொலிஸாரின் உதவியினால் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

