திஸ்ஸ அத்தநாயக்க மீண்டும் கட்சியில் இணைவதற்கு எந்த தடையும் இல்லை என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
அதன் பொதுசெயலாளர் கபீர் ஹாசீம் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொது செயலாளரான திஸ்ஸ அத்தநாயக்க, 2015 ஜனாதிபதி தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்து கட்சியில் இருந்து விலகினார்.
அவர் மீண்டும் கட்சியில் இணைவதற்கு உத்தியோகபூர்வமாக கோரிக்கை முன்வைத்தால், அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

