கடந்த வருடத்தை விட 9 A பெற்ற மாணவர்கள் இவ்வருடத்தில் அதிகம்

311 0

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை -2016 ஆம் ஆண்டு பெறுபேறுகளின் அடிப்படையில் 8224 மாணவர்கள் 9 பாடங்களிலும் “ஏ” சித்தியைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வருடம் 6102 மாணவர்கள் சகல பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்றுள்ளனர்.

இவ்வருடப் பெறுபேறுகளின் அடிப்படையில் கணிதம், வரலாறு ஆகிய பாடங்களில் சித்தியடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளதாகவும் கணிதப் பாடத்தில் சித்தியடைந்தவர்களின் எண்ணிக்கை 28877 எனவும், இது கடந்த வருடத்தைவிட 7.63 வீத அதிகரிப்பை காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.