மஹிந்த பாதுகாத்து வைத்திருந்த இந்த நாட்டின் சொத்துக்கள் வெளிநாட்டிற்கு விற்பனை – ஜீ. எல். பீரிஸ்

241 0

ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் மூலமாக நாட்டின் அரசியல் அமைப்பை மீறும் செயற்பாடுகளில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக மஹிந்த அணி குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, மஹிந்த அணியின் உறுப்பினரான ஜீ. எல். பீரிஸ் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சீனாவுடனான இந்த துறைமுக ஒப்பந்தம் அத்தியவசியமானது என குறிப்பிடுகின்றார்கள்.

அதனூடாக இந்த நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்யவே எதிர்ப்பார்க்கின்றனர்.

மஹிந்த ராஜபக்ச பாதுகாத்து வைத்திருந்த இந்த நாட்டின் சொத்துக்களை வெளிநாட்டிற்கு விற்பனை செய்கின்றனர்.

நாட்டின் தேசிய சொத்துக்களை வெளிநாட்டிற்கு விற்பனை செய்யும் இந்த செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளாரா என ஜீ. எல். பீரிஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.