இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றவை போர்க்குற்றங்களா? இல்லையா? என்பதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் – அரசாங்கம்

254 0

இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்களானது போர்க்குற்றங்களா? இல்லையா? என்பதை அது குறித்து விசாரிக்கும் நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சில் இன்று மாலை நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும், அவை போர்க்குற்றமா அல்லது இல்லையா என்பதை விசாரணையின் பின்னரே தீர்மானிக்க முடியும்.

இலங்கை இராணுவம் நல்லொழுக்கம் மிக்க சிறந்த இராணுவமாகும்.

எனினும் எவரேனும் குற்றமிழைத்திருப்பார்களாயின், அது குறித்து விசாரணை நடத்தி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கைத் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அவை போர்க்குற்றங்களா அல்லது இல்லையா என்பதை விசாரணையின் பின்னரே தீர்மானிக்க முடியும் என்று அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.