டெங்கு நோய் தொற்று காரணமாக இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை 40 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெங்கு நோய் தொற்று காரணமாக 24 ஆயிரத்து 560 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு, களுத்துறை, ரத்தினபுரி, கேகாலை, கம்பஹா, மாத்தறை, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் தொற்று பரவி செல்லும் அபாயம் நிலவுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

