குற்றச்சாட்டு என்ன என்பதை சரியாக அடையாளம் காணவேண்டும்

226 0

விசாரணை நடத்துவதற்கு முன்னர் சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்ன என்பதை சரியாக அடையாளம் காணவேண்டும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சிலர் அதனை போர்க் குற்றம் என்று அடையாளப்படுத்தினாலும், விசாரணைகளுக்கு முன்பாக அந்த குற்றச்சாட்டுக்கள் போர்க் குற்றமா இல்லையா என்பதை அடையாளம் காண வேண்டும் எனவும் அமைச்சர் மங்கள கூறியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.ஜெனிவா மனித உரிமை பேரவையில், இம்முறை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, சீனா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் ஆதரவு எமக்கு கிடைத்தன.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 5 நிரந்தர உறுப்பு நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு கிடைத்தமை வரலாற்று சிறப்புமிக்க விடயம்.எந்த விதத்திலும் போர்க் குற்றங்கள் பற்றி பேச முடியாது. எமது இராணுவம் உலகில் ஒழுக்கமான இராணுவங்களில் ஒன்று.

எனினும் எந்த இராணுவத்திற்கு பின்னாலும் சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்துள்ளன. இது உலகில் உள்ள எந்த இராணுவத்திலும் காணக்கூடிய ஒன்று.இதனால், சுமத்தப்படும் குற்றச்சாட்டு சம்பந்தமாக தேடிப்பார்க்க வேண்டும் என அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.