விமலை தேசிய மருத்துவமனைக்கு மாற்றும் தேவையில்லை – சிறைச்சாலைகள் திணைக்களம்

385 0

விமல் வீரவங்சவின் உடலநிலை சீறாக இருக்கின்றமையினால் அவரை தேசிய மருத்துவமனைக்கு மாற்றும் தேவையொன்று இல்லையெ சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவினால் மேற்கொள்ளப்படுகின்ற உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று ஏழாவது நாளாகவும் தொடர்வதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், விமல் வீரவங்சவை கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றுமாறு சிறைச்சாலை மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தும் பட்சத்தில் மாத்திரமே அவர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார் என சிறைச்சாலைகள் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.