ரவிராஜின் கொலை – விடுவிக்கப்பட்டவர்களை குற்றப் புலனாய்வு பிரிவின் ஊடாக தேடுவதற்கு உத்தரவு

354 0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும், குற்றப் புலனாய்வு பிரிவின் ஊடாக தேடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஆறு பேரில் ஒருவர் வழக்கு விசாரணைக் காலத்தில் உயிரிழந்ததுடன், இரண்டு பேர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருக்கவில்லை.

ஏனைய 3 பேரும் குற்றமற்றவர்கள் என்று மேல்நீதிமன்றம் விடுவித்திருந்தது.

இதனை அடுத்து குறித்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கோரி, நடராஜா ரவிராஜின் மனைவி சசிகலா நடராஜா தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவின் அடிப்படையில் இன்று மேன்;முறையீட்டு நீதிமன்றத்தினால் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துகு; கொள்ளப்பட்டது.

இதன்போது சசிகலா ரவிராஜின் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணியால், வழக்கு தொடர்பான அறிவிப்புக் கடிடத்தை குற்றம் சுமத்தப்பட்டுள்ள 3 பேரிடமும் சேர்க்க முடியாதிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

குறித்த மூன்று பேரும் அவர்களின் முகவரியில் இருந்து வெளியேறியுள்ளமையே இதற்கான காரணமாகும்.

இதனால் அவர்களை குற்றப் புலனாய்வு பிரிவின் ஊடாக தேடுவதற்கு உத்தரவிடுமாறு கோரப்பட்டமைக்கு அமைய, மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த உத்தரவை பிறப்பித்தது.

இந்த வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் ஜுன் மாதம் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.