எதிர்வரும் காலத்தில் இடம்பெறவுள்ள எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தயாராகவுள்ளதாக அதன் தலைவர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நிட்டம்புவவில்; இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.
அரசாங்கம் தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கையற்ற நிலை தோன்றியுள்ளது.
எனவே அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு மக்கள் சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கின்றனர்.
மக்களின் அந்த அபிலாசையை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தனித்து தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ஜீ எல் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

