தொடரூந்து சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது

311 0

வேதன உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தொடரூந்து சாரதிகள் மேற்கொள்ளவிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.

தமது கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் 24 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தொடரூந்து சாரதிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஏற்பட்ட இணக்கத்திற்கு அமைவாக இந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாக தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.