தோட்டத் தொழிலாளர்களுக்கு 2500 ஊதிய உயர்வுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

380 0

a86f81678f657ec34261292f611d3c0b_XLதோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் 2500 ஊதிய உயர்வை வழங்குவதற்கு இன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பனிகளுக்கு நிதிச்சலுகைகளை வழங்குவதற்கு பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை செயற்குழுவின் சிபார்சிக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.மாதாந்த சம்பள உயர்வை வழங்கும் நோக்கில் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு நிதிச் சலுகைகளை வழங்குவதற்கு அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் தேயிலையின் விலை சரிவடைந்துள்ளதால், தோட்டத் தொழிலாளிகளுக்கு மாதாந்தம் 2500 ஊதிய உயர்வை வழங்கமுடியவில்லை. இதனால் தோட்ட நிறுவனங்கள் பல சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளன. இதனைக் கருத்திற்கொண்டு குறித்த பிரதேசத்து தோட்ட நிறுவனங்களுக்கு இலங்கை தேயிலை சபையின் ஊடாக அரச வங்கியின் வழியாக கடன் உதவிகளை வழங்குவதற்கு ஏதுவான வகையில் திறைசேரியின் மூலம் ஒப்புதலை வழங்க நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது எனவும் தெரிவித்தார்.