மைத்திரி – ரணில் அரசாங்கம் இன்னும் 5 வருடங்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது

375 0

maithri-ranilசிறீலங்காவின் பிரதான கட்சிகளான சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கியதேசியக் கட்சியும் இணைந்து 2015ஆண்டு உருவாக்கிய அரசாங்கம் தொடர்ந்து 5 வருடங்கள் நீடித்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் தேசிய அரசாங்கமானது இரண்டு வருடங்கள் நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலே இன்றைய தினம் தேசிய அரசாங்கமானது இன்னமும் 5 வருடங்கள் ஆட்சியமைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா நாடாளுமன்றக் கட்டத் தொகுதியில் தேசிய அரசாங்கத்தின் பிரதான கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் பொதுச் செயலாளர்கள் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று பிற்பகல் நடாத்தினர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அமைச்சர் துமிந்த சில்வா தேசிய அரசாங்கத்தின் ஆயுட்காலம் 5 வருடங்களுக்குத் தொடரும் என அறிவித்திருந்தார்.

எதிர்வரும் 28ஆம் திகதி முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ மாபெரும் பேரணியை கண்டியிலிருந்து கொழும்புவரை நடாத்தத் தீர்மானித்த நிலையிலேயே சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து கூட்டாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.