காணாமல் போனோருக்கான அலுவலகம் யுத்தக்குற்ற நீதிமன்றத்தின் ஒரு அங்கம் என்கிறார் மஹிந்த

374 0

1காணாமல்போனோர் அலு­வ­லகம் என்ற பெயரில் அமைக்­கப்­படும் அலு­வ­ல­கத்தின் ஊடாக இரா­ணு­வத்­தி­னரை பழி­வாங்கும் முயற்­சியில் நல்­லாட்சி அர­சாங்கம் ஈடு­ப­டு­வ­தாக முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­ணாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.

அதே­நேரம் எதிர்­வரும் நாட்­களில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் பரிந்­து­ரைக்­க­மைய நிறு­வப்­ப­ட­வுள்ள யுத்த குற்ற நீதி­மன்­றத்தின் ஒரு அங்­க­மா­கவே இந்த காணாமல் போனோர் குறித்த அலு­வ­லகம் செயற்­படும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.அவ்­வ­றிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,நாட்டின் பொரு­ளா­தார நெருக்­க­டிகள் இருந்­த­போ­திலும் காணாமல் போனோர் அலு­வ­ல­கத்தை அமைப்­ப­தற்­கான சட்­ட­மூ­லத்தை நல்­லாட்சி அர­சாங்­கத்­தினர் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்­துள்­ளனர். இந்த அலு­வ­லகம் கடந்த ஐக்­கிய நாடுகள் சபை மனித உரி­மைகள் பேர­வையின் அமர்வின் போது சர்­வ­தேச சக்­தி­க­ளுடன் ஒன்­றி­ணைந்து நல்­லாட்சி அர­சாங்கம் செய்­து­கொண்ட ஒப்­பந்­தத்தின் பிர­காரம் முன்­னெ­டுக்க வேண்­டிய செயற்­பா­டு­களின் ஆரம்ப கட்­ட­மா­கவே திறக்­கப்­ப­ட­வுள்­ளது.

அதற்­க­மைய பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள சட்­ட­மூ­லத்­திலும் எமது இரா­ணு­வத்­தி­னரை பழி­வாங்கும் வகை­யி­லான சட்­ட­மூ­லங்கள் பல குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன. அவற்றை நாட்டு மக்­க­ளுக்கு சுட்­டி­காட்­டி­வேண்­டிய கட்­டாயம் தோன்­றி­யுள்­ளது.

அதன் பிர­காரம் காணாமல் போனோர் அலு­வ­ல­க­மா­னது நீதியை நடை­மு­றைப்­ப­டுத்தும் அல்­லது பொறுப்­பு­கூ­ற­லுக்கு இணங்கி செயற்­படும் ஒரு அலு­வ­லக கட்­ட­மைப்பில் உள்­ள­டங்­கி­ய­தாக அமை­யாது. இந்த அலு­வலம் பாரா­ளு­மன்றம் ஊடாக ஸதா­பிக்­கப்­ப­டு­வதால் அரச நிறு­வ­னங்கள் உள்­ள­டங்கும் நீதிக்­கட்­ட­மைப்­பி­லி­ருந்து விடுப்­பட்டு சுயா­தீ­ன­மாக இயங்கும் நிறு­வ­ன­மாக அமையும்.

இது ஒரு அலு­வ­லகம் என்ற பெயரில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டாலும் இதனை விசா­ர­ணை­சபை என்று குறிப்­பி­டு­வதே பொருத்­த­மா­ன­தாகும். இந்த நிறு­வனம் சாட்­சி­யா­ளர்­களை அழைத்­து­வந்து விசா­ரணை செய்­யவும்,சோதனை நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கவும், அழைப்­பானை விடுப்­ப­தற்­கு­மான அதி­கா­ரங்­களை கொண்­டுள்­ளது.

அத்­துடன் இவர்­க­ளுக்­கான அதி­கா­ரங்­க­ளுக்­க­மைய பகல் இரவு என்று பாராமல் தான் நினைத்த மாத்­தி­ரத்தில் பொலிஸார் அல்­லது இரா­ணு­வத்­தினர் உள்­ளிட்ட எவ­ரையும் கைது செய்­யவும் அவர்கள் வச­மி­ருக்கும் பொருட்­களை கைப்­பற்­றவும் முடியும். அவ்­வாறு இவர்­களின் விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­காத எவ­ருக்கு எதி­ரா­கவும் நீநிச் சேவை­களை அவ­தூறு செய்த குற்­றச்­சாட்டின் பேரில் வழக்கு தாக்கல் செய்ய முடியும்.

பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள சட்­ட­மூ­லத்தின் பிர­காரம் இந்த அலு­வ­ல­கத்தில் விசா­ரணை கட­மை­களை முன்­னெ­டுக்கும் 7 பேருக்கும் சர்­வ­தேச மனித உரி­மைகள் தொடர்­பி­லான சட்ட ரீதி­யி­லான அறிவு இருப்­பது அவ­சியம் எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதற்­க­மைய இங்கு சர்­வ­தேச மட்­டத்தில் இயங்கும் அரச சார்­பற்ற மற்றும் சர்­வ­தேச நடை­மு­றை­க­ளுக்­க­மைய நடத்­தப்­பட்­டு­வரும் யுத்­த­குற்ற நீதி­மன்­றங்­களில் பணி­யாற்­றிய அனு­பவம் உள்­ள­வர்­களே இங்கும் பணி­யாற்ற முடியும் என்ற காரணி வெளிப்­ப­டை­யா­கின்­றது.

இந்தச் சட்­ட­மூ­லத்தின் 21 ஆம் சரத்தின் பிர­காரம் எந்­த­வொரு வெளி­நாட்டு நிறு­வ­ன­தி­டத்­திலும் இருந்து நிதியை பெற்­றுக்­கொள்ள முடியும். அலு­வ­லக சேவை­களின் பிர­காரம் எந்­த­வொரு வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளு­டனும் ஒப்ந்­தங்­கயை செய்­துக்­கொள்ளும் அதி­கா­ரமும் இந்த அலு­வ­ல­கத்­திற்கு உள்­ளது.

இந்த அலு­வ­ல­கத்தில் பிர­தி­நி­திகள் தமக்கு கீழான பிரி­வு­களை நிறுவி அவர்­க­ளுக்­கான அதி­கா­ரங்­க­ளையும் வழங்­கக்­கூ­டி­ய­வர்­க­ளாக இருப்பர். இந்த நிறு­வ­னத்­திற்­கான சேவை­யா­ளர்­களை நிய­மிப்­ப­தற்கும் பதவி நீக்­கு­வ­தற்கும் அலு­வ­ல­கத்தின் தலை­மை­க­ளுக்கு மட­டுமே அதி­கா­ரங்கள் உள்­ளன. குறிப்­பாக இங்கு சேவை­யாற்றும் எவரும் இலங்­கை­யர்­க­ளாக இருக்க வேண்டும் என்று எவ்­வி­டத்­திலும் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

இந்த நிறு­வ­னத்தில் இலங்­கையில் உள்­ள­வர்­க­ளுக்கும் வெளி­நா­டு­களில் சென்று குடி­யே­றி­யி­ருப்­ப­வர்­க­ளுக்கும் முறை­பா­டு­க­ளையும், சாட்­சி­யங்­க­ளையும் வழங்க முடியும். அதேபோல் நாட்டின் முப்­ப­டை­யி­னரும் இந்த இந்த நிறு­வ­னத்தின் விசா­ரணை நட­வ­டிக்­கை­க­ளுக்கு முழு­மை­யான பங்­க­ளிப்பை வழங்க வேண்­டி­யது மிக அவ­சி­ய­மாகும்.

இந்த சட்­டத்தின் 12 இலக்கச் சட்­டத்தின் “அ” எனக் குறிப்­பி­டப்­பட்ட சரத்தின் பிர­காரம் எந்த ஒரு தக­வ­லையும், பொருட்­க­ளையும் சாட்­சி­யங்­க­ளாக பயன்­ப­டுத்தும் அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. அதே­நேரம் அந்த அலு­வ­ல­கத்தின் சேவை­களில் தகவல் அறியும் சட்­ட­மூ­லத்தின் தாக்கம் இருக்காது. இந்த அலுவலக பிரதிநிதிகளுக்கு கிடைக்கபெறும் ஆவணங்கள் தொடர்பில் விமர்சிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்ற நீதியரசர் உட்பட எவருக்கும் வழங்கப்படவில்லை எனபதும் முக்கியமாக சுட்டிகாட்டத்தக்கது.

இவ்வாறான காரணங்களுக்கமையாவ காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் அலுவலகம் என்பது யுத்த குற்ற நீதிமன்றத்தின் ஒரு அங்கமாக அமையும் என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது. அதனால் இந்தச் சட்டமூலத்திற்கு அமைவாக வாக்களிக்கும் அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எமது தேசம்,இராணுவம் ஆகியோரை காட்டிக்கொடுத்தமைக்காக மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய கட்டாயம் தோன்றும் என்றார்.