இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆணைக்குழுவில் கேள்வி

310 0

chitrangani_CIபயங்­க­ர­வாத தடைச்சட்­டத்தை நீக்­குதல், வடக்கில் பொது மக்­களின் காணி­களை விடு­வித்தல், வடக்கு மற்றும் கிழக்கு மக்­களின் இயல்புவாழ்க்­கையை உறுதிசெய்தல், நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூ­ற­லுக்­கான பொறி­மு­றை­யினை உரு­வாக்­குதல் உள்­ளிட்ட விட­யங்கள் தொடர்பில் பிரஸ்­ஸல்ஸில் நடை­பெற்ற இலங்கை மற்றும் ஐரோப்­பிய ஒன்­றிய கூட்டு ஆணைக்­குழுக்       கூட்­டத்தில் விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளது.

அத்­துடன், இலங்­கையின் இணைஅனுச­ர­ணை­யுடன் கடந்த வருடம் ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையை முழுமை­யாக அமுல்­ப­டுத்த நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்தல், பயங்­க­ர­வாத தடைச்சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களை விடு­வித்தல் அல்­லது சட்ட நட­வ­டிக்­கை­களை எடுத்தல் உள்­ளிட்ட விட­யங்கள் குறித்தும் இதன்­போது ஆரா­யப்­பட்­டுள்­ளது.

இலங்­கைக்கும், ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துக்கும் இடை­யி­லான கூட்டு ஆணைக்­கு­ழுவின்20 ஆவது அமர்வு நேற்று முன்­தினம் பெல்­ஜி­யத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடை­பெற்­றது. இந்தக் கூட்­டத்தில் இலங்­கையின் சார்பில் வெளி­வி­வ­கார அமைச்சின் செய­லாளர் சித்­ராங்­கனி வாகிஸ்­வர மற்றும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் வெளி­வி­வ­கார செயற்­பாட்டு சேவையின் ஆசிய பசு­பிக்கின் முகா­மைத்­துவ பணிப்­பாளர் குன்னர் வீகான்ட் ஆகியோர் கலந்து கொண்­டி­ருந்­தனர். இது தொடர்பில் வெ ளிவி­வ­கார அமைச்சு விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, இந்த அமர்­வா­னது மிகவும் பயன்­னுள்ள வகையில் அமைந்­தி­ருந்­தது.

இதன்­போது அண்­மையில் இலங்­கையில் ஏற்­பட்ட வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவு அனர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு ஐரோப்­பிய ஒன்­றியம் தனது அனு­தா­பத்தை தெரி­வித்­தி­ருந்­தது. அதே­போன்று இந்த அனர்த்­தத்­தின்­போது இலங்­கைக்கு ஐரோப்­பிய ஒன்­றியம் 114.5 மில்­லியன் ரூபாவை உத­வி­யாக வழங்­கி­யமை தொடர்பில் இலங்­கையின் சார்பில் நன்றி தெரி­விக்­கப்­பட்­டது.

இலங்கை மீதான மீன் ஏற்­று­மதி தடை­யினை ஐரோப்­பிய ஒன்­றியம் நீக்­கி­யமை தொடர்பில் இதன்­போது ஆரா­யப்­பட்­ட­துடன் அதனை ஆணைக்­கு­ழு­வா­னது வர­வேற்­றது. மீன்­பி­டித்­து­றையில் இலங்கை சர்­வ­தேச தரத்­தினை பின்­பற்­றி­யமை மற்றும் மீன்­பிடி முகா­மைத்­து­வத்தில் அடைந்த முன்­னேற்றம் என்­ப­வற்­றி­னா­லேயே இந்த சாதனை அடையப் பெற்­ற­தாக கூட்டு ஆணைக்­குழு கூட்­டத்தில் குறிப்­பி­டப்­பட்­டது.

அத்­துடன் இலங்­கைக்கும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­திற்­கு­மி­டையில் மீன்­பி­டித்­து­றையில் ஒரு சிறந்த முறை­யான உறவை நீடிக்க வேண்­டு­மென்றும் இதன்­போது இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டது. இது இவ்­வா­றி­ருக்க இம்­முறை கூட்டு ஆணைக்­குழு கூட்­டத்­தின்­போது கடந்த வருடம் ஒக்­டோபர் மாதம் ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் இலங்­கையின் இணை அனு­ச­ர­ணை­யுடன் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ரணை தொடர்­பாக விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக இந்த பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வது தொடர்­பாக இரு தரப்­பிலும் ஆரா­யப்­பட்­டது. அத்­துடன் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை நீக்­குதல், வடக்கில் பொது மக்­களின் காணி­களை விடு­வித்தல், வடக்கு மற்றும் கிழக்கு மக்­களின் இயல்பு வாழ்க்­கையை உறுதி செய்தல், நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூ­ற­லுக்­கான பொறி­மு­றை­யினை உரு­வாக்­குதல் போன்ற விட­யங்கள் தொடர்­பா­கவும் இந்தக் கூட்­டத்­தின்­போது விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களை விடு­வித்தல் அல்­லது அவர்கள் தொடர்பில் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தல் தொடர்­பா­கவும் ஆரா­யப்­பட்­டுள்­ளது. இத­னி­டையே புதிய அர­சி­ய­ல­மைப்பு வரை­பினை தயா­ரிப்­ப­தற்கு அர­சாங்கம் முன்­னெ­டுத்­து­வரும் வேலைத்­திட்­டங்கள் குறித்தும் இலங்கை அர­சாங்­கத்தின் சார்பில் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­திற்கு விரி­வாக விளக்கம் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லு­கை­யினை மீண்டும் இலங்கை பெற்றுக் கொள்ளும் நோக்கில் விண்­ணப்­பிக்­கப்­பட்­டுள்­ள­மையும் கூட்டு ஆணைக்­குழு வர­வேற்­றது. இலங்கை அர­சாங்கம் தமது சர்­வ­தேச அர்ப்­ப­ணிப்பை மீள்­பு­துப்­பித்­துள்­ளதன் கார­ண­மா­கவே இவ்­வாறு இந்த விண்­ணப்பம் வர­வேற்க்­கப்­பட்­டுள்­ளது. ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லு­கை­யினை பெற்றுக் கொள்­வ­தற்­கான விண்­ணப்பம் ஜூன் மாத இறு­தியில் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­திற்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டது.

இது இவ்­வா­றி­ருக்க இலங்­கைக்கும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­திற்கும் இடை­யி­லான முத­லீட்டு கலந்­து­ரை­யா­டல்­களை மீண்டும் ஆரம்­பிப்­ப­தற்கும் கூட்டு ஆணைக்­குழு இணக்­கப்­பாட்­டிற்கு வந்­தது. பாரிய கொழும்பு கழி­வுநீர் திட்­டத்­திற்கு ஐரோப்­பிய முத­லீட்டு வங்கி இலங்­கைக்கு 820 கோடி ரூபா சலுகை கடனை வழங்­கு­வது தொடர்பில் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்டு வரு­வ­தா­கவும் இதன்­போது சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

அது­மட்­டு­மன்றி நல்­லாட்சி மற்றும் நல்­லி­ணக்­கத்தின் அடிப்­ப­டையில் கிரா­மிய அபி­வி­ருத்­திற்கு அப்­பாற்­பட்டு 2014-2020 ஆண்­டு­க­ளுக்­கி­டை­யி­லான அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க 3440 கோடி ரூபா உத­வியை வழங்­கு­வது குறித்தும் இந்த கூட்டு ஆணைக்­கழு அமர்­வின்­போது ஆரா­யப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பான முக்­கி­யத்­து­வ­மான பேச்­ச­வார்த்­தை­களை இலங்கை அர­சாங்­கமும், ஐரோப்­பிய ஒன்­றி­யமும் அடுத்து வரும் மாதங்­களில் முன்­னெ­டுப்­ப­தற்கும் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது.

1995 ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட ஐரோப்­பிய ஒன்­றி­யத்­திற்கும் இலங்கைக்குமிடையிலான கூட்டு ஆணைக்குழுவானது பரந்துபட்ட இருதரப்பு உறவுகள், இருதரப்பு பரஸ்பர அக்கறை, அபிவிருத்தி பங்குடமை போன்ற விடயங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறது. இந்த கூட்டு ஆணைக்குழுவின் கீழ் நல்லாட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சிப்படுத்தல், மனித உரிமை செயற்குழு, வர்த்தகம் பொருளாதாரம் மற்றும் கூட்டுறவு செயற்குழு மற்றும் அபிவிருத்தி கூட்டுறவு தொடர்பான செயற்குழு ஆகியன இயங்கி வருகின்றன. இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குமிடையிலான கூட்டு ஆணைக்குழுவின் 21 ஆவது அமர்வு எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.