யாழ்.பல்கலைக்கழக மோதல் குறித்து ஆராய பல்கலைக்கழக நிர்வாகக்குழு

365 0

1383013_375634102570021_437982130_nயாழ்.பல்­க­லை­க்க­ழக மோதல் குறித்து ஆராய பல்­க­லைக்­க­ழக நிர்­வாகக்குழு­வொன்றை நிய­மித்து சம்­பவம் தொடர்பில் நாட்டின் சட்டம் நீதி முறை­மை­க­ளுக்கு அமைய பொலிஸ் மட்­டத்தில் விசா­ர­ணை­கள் மேற்­கொள்­ளப்­படும். இந்தச் செயற்­பாட்டின் ஊடாக குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­டு­ வார்கள் என வட­ மா­காண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரி­வித்தார்.

நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் நகர்­வு­களில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்தும் வகையில் இந்த சம்­பவம் அமைந்­துள்­ளது. இது சிங்­கள தமிழ் இன­வா­தி­க­ளுக்கு தீனி­யாக அமைந்­து­விட்­டது எனவும் அவர் குறிப்­பிட்டார்.வட­மா­காண ஆளு­நரின் கொழும்பில் உள்ள உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்­பின்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில் ,

யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தில் புதிய மாண­வர்­களை இணைத்­துக்­கொள்ளும் நிகழ்வில் தமிழ் சிங்கள் மாண­வர்கள் மத்­தியில் இடம்­பெற்ற மோதல் சம்­பவம் மிகவும் கண்­ட­னத்­துக்­கு­ரி­ய­தாக மாற்றம் பெற்­றுள்­ளது. இந்த சம்­பவம் இப்­போது இரண்டு தரப்­பினர் மத்­தி­யிலும் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதற்கு முன்­னரும் இவ்­வா­றான நிகழ்­வுகள் இடம்­பெற்­றுள்­ளன. அப்­போது எந்த முரண்­பா­டு­களும் ஏற்­ப­ட­வில்லை.

மத நிகழ்­வு­க­ளுக்கு சக­லரும் இட­ம­ளிக்க வேண்டும். தேசிய கீதம் தமிழில் இயற்­றப்­பட வேண்டும் என்ற வேண்­டு­கோ­ளுக்கு நாம் மதிப்­ப­ளிப்­பதை போலவே சிங்­கள நிகழ்­வு­க­ளுக்கு தமிழ் மக்­களும் மதிப்­ப­ளிக்க வேண்டும். அவ்­வாறு விட்டுக் கொடுப்பும் ஒற்­று­மையும் இருந்தால் தான் நல்­லி­ணக்கம் ஏற்­படும். மேலும் இந்த சம்­ப­வத்தில் இரண்டு தரப்­பி­ன­ரி­டத்­திலும் தவ­றுகள் உள்­ளன.
அதேபோல் இந்த சம்­ப­வத்தை திரி­பு­ப­டுத்­தியும் சட்ட நட­வ­டிக்­கை­களில் தாமதல் ஏற்­ப­டு­வ­தாக கூறியும் பல்­வேறு விமர்­ச­னங்­களை அர­சியல் ரீதியில் முன்­வைக்­கின்­றனர். வடக்­கிலும் தெற்­கிலும் பாரிய இன­வா­த­மாக இந்த சம்­ப­வத்தை கொண்டு செல்­கின்­றனர். வடக்கில் உள்ள தமிழ் இன­வா­தி­க­ளுக்கும் தெற்கில் உள்ள சிங்­கள இன­வா­தி­க­ளுக்கும் இது தீனி­யாக அமைந்­து­விட்­டது.

வடக்கில் இப்­போதும் இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்பில் சிங்­கள மாண­வர்கள் தாக்­கு­தலை நடத்­தி­யதாக் கூறு­கின்­றனர். அதேபோல் தெற்­கிலும் தமிழ் மாண­வர்­களின் மீது குற்றம் சுமத்­தப்­பட்டு வரு­கின்­றது. அத்­துடன் சிங்­கள மத விட­யங்­களை வடக்கில் புறக்­க­ணிப்­ப­தாக கூறு­கின்­றனர். எனினும் இந்த விட­யங்­களை தவிர்த்­துக்­கொள்ள வேண்டும். இந்த சம்­ப­வத்தை அர­சியல் மயப்­ப­டுத்தி குழப்­பங்­களை பெரி­து­ப­டுத்­தாது சட்ட நகர்­வு­க­ளுக்கு இட­ம­ளிக்க வேண்டும். அதேபோல் குழப்­பங்­களை மேலும் விமர்­சித்து பல்­க­லைக்­க­ழக செயற்­பா­டு­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­து­வதை தவிர்த்­துக்­கொள்ள வேண்டும்.

இந்த சம்­பவம் தொடர்பில் ஆராய இரண்டு கட்ட நகர்­வுகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. அதா­வது பல்­க­லைக்­க­ழக நிர்­வாகக் குழு­வொன்றை நிய­மித்து சம்­பவம் தொடர்பில் ஆரா­யவும் பல்­க­லைக்­க­ழக செயற்­பா­டுகள் தொடர்பில் அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அதேபோல் நாட்டின் சட்டம் நீதி முறை­மை­க­ளுக்கு அமைய செயற்­படும் வகையில் சிவில் உரி­மை­களை பாது­காக்க பொலிஸ் மட்­டத்தில் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு சட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும்.

மோதலில் காய­ம­டைந்த மாண­வர்கள் வைத்­திய சாலையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். அதேபோல் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­டு­களை செய்­துள்­ளனர். ஆகவே சட்ட ரீதி­யி­லான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். இதில் தமிழர், சிங்­க­ளவர் என்ற பாகு­பா­டுகள் இல்­லாது மத இன ரீதி­யி­லான விமர்­ச­னங்­க­ளுக்கு அப்பால் சட்ட ரீதி­யி­லான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு குற்­ற­மி­ழைத்த நபர்கள் தண்­டிக்­கப்­ப­டு­வார்கள். அதேபோல் பல்­க­லைக்­க­ழக மோதலில் வெளி­யாட்­களின் பிர­வேசம் இருந்­த­தா­கவும், இனந்­தெ­ரி­யாத நபர்­களை வைத்து தாக்­கு­தலை நடத்­தி­ய­தா­கவும் சில முறைப்­பா­டுகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. ஆகவே அதற்­க­மைய பொலிஸ் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­பட்டு சட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும்.

எனினும் இந்த கார­ணத்தை வைத்து பல்­க­லைக்­க­ழக நட­வ­டிக்­கை­க­ளுக்கு தடை­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டாது. மாண­வர்­களின் பரீட்சை நெருங்கும் நிலையில் கல்வி நட­வ­டிக்­கை­களை குழப்­பக்­கூ­டாது. படிப்­ப­டி­யாக ஒவ்­வொரு பீடங்­களின் நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட வேண்டும்.

ஜனா­தி­ப­தியும் இந்த விட­யங்கள் தொடர்பில் என்­னுடன் கலந்­து­ரை­யா­டினார். உட­ன­டி­யாக நிலை­மை­களை வழ­மைக்கு கொண்­டு­வ­ரும்­படி கேட்­டுக்­கொண்டார். அதேபோல் நல்­லி­ணக்கம் என்­பது வடக்­குடன் முடி­வ­டையும் ஒன்றா அல்­லது தெற்கில் மட்­டுமா என்ற கேள்­விகள் எழுப்­பப்­ப­டு­கின்­றன.

இன­வா­திகள் வடக்கில் போலவே தெற்­கிலும் உள்­ளனர். பௌத்­தத்­திலும் மாத்­திரம் இல்லை இந்து, முஸ்லிம் மக்கள் மத்­தி­யிலும் அடிப்­படை வாதிகள் உள்­ளனர். ஆகவே இந்த சம்­ப­வங்கள் அவ்­வா­றான ஒரு சில­ரினால் நடத்­தப்­பட்­ட­தொன்­றே­யாகும். . எனினும் பெரும்­பான்மை சிங்­கள, தமிழ் மக்கள் நல்­லி­ணக்­கத்­தையே விரும்­பு­கின்­றனர். அதை கவ­னத்தில் கொண்டு செயற்­பட வேண்டும். எனினும் நல்­லி­ணக்கம் என்­பது இல­குவில் ஏற்­படும் ஒன்­றல்ல. பல கால­மாக துன்­பப்­பட்டு விடு­த­லை­யான மக்கள் மத்­தியில் உட­ன­டி­யாக நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடி­யாது. மீள் நிர்­மாணம் என்­பது இல­கு­வா­னது. ஆனால் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வது மிகவும் கடி­ன­மான பய­ண­மாகும்.

கேள்வி:- இந்த சம்­ப­வத்­துடன் இரா­ணுவம் தொடர்­பு­பட்­டுள்­ளதா? திட்­ட­மிட்ட ஒன்­றாக கூறப்­ப­டு­கின்­றதே?

பதில்:- இந்த விடயம் தொடர்பில் பல்­வேறு கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. அதில் ஒன்­றா­கவே இரா­ணு­வத்­தையும் உள்­நு­ழைக்­கின்­றனர். எனினும் இந்த குற்­றச்­சாட்­டுகள் எவ­ற­றிலும் உண்மை இல்லை. ஆகவே எந்த சந்­தர்ப்­பத்­திலும் இதில் இராணுவம் தொடர்புபட வாய்ப்பு இல்லை. அதேபோல் இந்த சம்பவம் திட்டமிட்ட ஒன்றாகவும் என்னால் கருத முடியவில்லை. உணர்வுகளுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பம் மட்டுமே இவையாகும். தமிழர் கலாசாரம் அரங்கேற்றப்பட்ட நிலையில் சிங்கள கலாசார நிகழ்வுகள் தடுக்கப்பட்டதன் மூலமாகவே இந்த சம்பவம் ஏற்பட்டது.

கேள்வி:- ஏன் சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்யப் படவில்லை?

பதில்:- உணர்ச்சிவசப்பட்டு சட்டத்தை கையில் எடுக்க முடியாது. விசாரணைகளை மேற்கொண்டு அதற்கு ஏற்றால் போலவே சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது உண்மையேயாகும். எனினும் விரைவில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்றார்.