வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் – சீ.சீ.ரி.வி.காட்சிகளை கனடாவுக்கு அனுப்ப விஸா இதுவரை கிடைக்கவில்லை

290 0

waseemபிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­காரம் தொடர்பில் முன்னாள் நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­கா­ரியின் தொலை­பேசி ஆய்வுத் தக­வல்­க­ளுக்கு அமைய, ஜனா­தி­பதி பாது­காப்புப் பிரிவின் பல உத்­தி­யோ­கத்­தர்­களை தொட ர்ச்­சி­யாக விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ள­தாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் தெரிவித்தனர்.

இதனை விட ஜனா­தி­பதி பாது­காப்புப் பிரிவில் சேவை­யாற்றி ஓய்­வு­பெற்­றுள்ள மிக முக்­கிய இரா­ணுவ அதி­கா­ரி­யாக கரு­தப்­படும் உதய நந்­தன நாக­ஹ­வத்த ஆரச்சி தொடர்­பிலும் விசா­ர­ணைகள் தொடர்­வ­தா­கவும் அவரை பல முறை விசா­ரணை செய்­துள்­ள­தா­கவும் புல­னாய்வுப் பிரி­வினர் குறிப்பிட்டனர்.

வஸீம் தாஜுதீன் படு­கொலை விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு நேற்று கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த சில்வா முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­த­போதே மேல­திக விசா­ரணை அறிக்கை ஊடாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் மனிதப் படு­கொ­லைகள் தொடர்­பான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரவீந்­திர விம­ல­சிறி இந்த விடயங்களை நீதி­வானின் கவ­னத்­திற்கு கொண்டு வந்தார்.

விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தின் முன்னாள் குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி சுமித் சம்­பிக்க பெரேரா, மேல் மாகா­ணத்­துக்கு பொறுப்­பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனா­நா­யக்க ஆகியோர் சிறைச்­சாலை அதி­கா­ரி­களால் மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டனர்.

இந்­நி­லையில் வழக்கு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­ட­போது அரசின் சிரேஷ்ட சட்­ட­வாதி டிலான் ரத்­நா­யக்­க­வுடன் வந்­தி­ருந்த விசா­ர­ணை­யா­ள­ரான குற்றப் புல­னாய்வுப் பிரிவின் மனிதப் படு­கொ­லைகள் தொடர்­பான பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரவீந்­திர விம­ல­சிறி மேல­திக விசா­ரணை அறிக்­கையை நீதிவான் நிஸாந்த பீரி­ஸிடம் கைய­ளித்தார்.

அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­த­தா­வது;புதிய சீ.சீ.ரீ.வி. காணொ­ளிகள் தொடர்பில் கடந்த 2016.07.08 அன்று நீதி­மன்றில் பெற்றுக் கொண்ட உத்­த­ரவு அன்­றைய தினமே பொலிஸ் சீ.சீ.ரி.வி. பிரிவின் பதில் பணிப்­பாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் கம்­லத்­திடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

அதன்­படி அப்­பி­ரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ஏ.எம்.பி.ரி.பி. சென­வி­ரத்ன கடந்த 2012.05.16 ஆம் திகதி இரவு 11.00 மணி முதல் 2012.05.17 அதி­காலை 2.00 மணி­வ­ரை­யி­லான சீ.சீ.ரி.வி. காட்­சி­களை சமர்ப்­பித்­துள்ளார்.
கிரு­லப்­பனை ஹைலெவல் வீதி, பேஸ்லைன் வீதியில் பொலிஸ் சீ.சீ.ரீ.வி. பிரிவின் கட்­டுப்­பாட்டில் பொருத்­தப்­பட்­டுள்ள KIR, 1F, 2F, 3F, மற்றும் 4F ஆகிய கம­ராக்­களில் இருந்தும் நார­ஹேன்­பிட்டி சந்­தியில் பொறுத்­தப்­பட்­டுள்ள NAR, 1F, 2F, 3F, 4F மற்றும் 5F ஆகிய கம­ராக்­களின் பதி­வு­க­ளிலும் இருந்த காட்­சிகள் இவ்­வாறு எமக்கு கடந்த 2016.7.11 அன்று 10 இறு­வட்­டுக்­க­ளாக கிடைத்­தன.

இந்­நி­லையில் முன்னர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் இருந்து நாம் கைப்­பற்­றிய 4 தெளி­வற்ற சீ.சீ.ரீ.வி. சாட்­சிகள் அடங்­கிய சீ.டி.க்கள், தற்­போது கிடைத்­துள்ள காணொ­ளி­களை ஆய்­வுக்­காக கன­டாவின் நிறு­வ­னத்­துக்கு அனுப்பும் முயற்­சிகள் தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. அதன் ஒரு அங்­க­மாக கடந்த 2016.7.13 அன்று கனடா தூத­ர­கத்­திற்கு இந்த சீ.சீ.ரீ.வி. காணொ­ளி­களை ஆய்­வுக்கு கொண்டு செல்லும் இரு புல­னாய்வு அதி­கா­ரி­களும் அழைக்­கப்­பட்டு விசா தொடர்பில் நேர்­முகப் பரீட்­சையும் இடம்­பெற்­றது. எனினும் இது­வரை விசா கிடைக்­க­வில்லை. பிரிட்டிஸ் நிறு­வ­னமோ காணொ­ளி­களை 2016.08.15 இற்கு முன்னர் ஆய்­வு­க­ளுக்­காக சமர்ப்­பிக்க கோரி­யுள்­ளது.

இத­னை­விட இந்த படு­கொலை சம்­பவம் இடம்­பெற்ற போது நார­ஹேன்­பிட்டி பொலிஸ் நிலை­யத்தின் பொறுப்­ப­தி­கா­ரி­யாக இருந்த பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் டேனியல் பெரே­ராவின் கைய­டக்கத் தொலை­பே­சிக்கு உள்­வந்த வெளிச் சென்ற அழைப்­புக்கள் தொடர்பில் நாம் சூட்­சும விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கிறோம். குறிப்­பாக இத­னுடன் தொடர்­பு­பட்­ட­தாக ஜனா­தி­பதி பாது­காப்பு பிரிவில் கட­மை­யாற்றும் நான்கு பொலி­ஸா­ரிடம் நாம் விசா­ர­ணை­களை செய்­துள்ளோம்.

சார்ஜன் தர அதி­கா­ரி­க­ளான வெல்­லகே ரஞ்சித் பிரே­மலால் சில்வா (14226), மதுர நாயக்க தயா­ரத்ன (29203), தென்­ன­கோன்­லாகே பிரே­ம­கு­மார சந்­தி­ர­தி­லக (8129) ஆகி­யோ­ரி­டமும் கான்ஸ்­ட­பி­ளான பிரதீப் ருவன் குமா­ர­வி­டமும்  (13871) இவ்­வாறு விசா­ரணை நடத்­தப்­பட்டு வாக்­கு­மூ­லமும் பெறப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் ஜனா­தி­பதி பாது­காப்புப் பிரிவில் தீர்­மா­ன­மிக்க அதி­கா­ரி­யாக செயற்­பட்டு தற்­போது ஓய்­வு­பெற்­றுள்ள முக்­கிய இரா­ணுவ அதி­கா­ரி­யான உதய நந்­தன நாக­ஹ­வத்த தொடர்­பிலும் விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன. அவரை குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வுக்கு அழைத்து தொடர்ந்து விசா­ரணை செய்து வரு­கிறோம்.ஆகவே சந்­தே­க­ந­பர்­களை தொடர்ந்தும் விளக்­க­ம­றி­யலில் வைக்க கோரு­கிறோம் என அவ்­வ­றிக்­கையில் கோரப்­பட்­டி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து கருத்­துக்­களை முன்­வைத்த அரசின் சிரேஷ்ட சட்­ட­வாதி டிலான் ரத்­நா­யக்க மேற்­படி விட­யங்­களை மேலோட்­ட­மாக சுட்­டிக்­காட்டி, சந்­தே­க­ந­பர்­க­ளுக்கு எதி­ராக தண்­டனை சட்டக் கோவையின் 32 ஆம் அத்­தி­யா­யத்­துடன் இணைந்து பேசப்­படும் 113, 296 ஆகிய பிரி­வு­களின் கீழ் சந்­தே­க­ந­பர்­க­ளுக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ளதால் பிணை கோரினால் அதனை நிரா­க­ரிக்க வேண்டும் என கூறினார். இத­னை­ய­டுத்து முத­லா­வது சந்­தேக நப­ரான சுமித் சம்­பிக்க பெரே­ராவின் சட்­டத்­த­ரணி அஜித் பத்­தி­ரன தனது கருத்­துக்­களை முன்­வைத்தார்.

”எனது சேவை பெறுநர் தொடர்பில் நான் மேல் நீதி­மன்றில் பிணை மனு­தாக்கல் செய்­துள்ளேன். பொலிஸார் தாக்கல் செய்த முதல் பீ அறிக்­கை­யிலோ அல்­லது ஏனைய விசா­ர­ணை­அறிக்­கை­யிலோ, எனது சேவை பெறுநர் இந்த விவ­கா­ரத்தில் நேர­டி­யா­கவோ மறை­மு­க­மா­கவோ தொடர்­பு­பட்டார் என்­ப­தற்­கான எந்த ஆதா­ரமும் இல்லை.

தான் ஏன் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளேன் என்­பதை தெரிந்து கொள்ளும் உரிமை எனது சேவை பெறு­ந­ருக்கு உள்­ளது. அதனால் அத­னை­யேனும் இந்த மன்று வெளிப்­ப­டுத்த வேண்டும்.அத்­துடன் எனது சேவை பெறுநர் அதீத நீரி­ழிவு நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்ளார். எனவே அவ­ருக்­கான வைத்­திய சிகிச்­சை­க­ளுக்கு உத்­த­ர­விட வேண்டும் என்றார்.இத­னை­ய­டுத்து 2 ஆவது சந்­தேக நப­ரான அநுர சேன­நா­யக்­கவும் மேல் நீதி­மன்றில் பிணை மனு தாக்கல் செய்­துள்­ள­தாக நீதி­வா­னுக்கு அறி­வித்தார்.

இந்­நி­லையில் இலங்கை வைத்­திய சபை­யினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள தாஜு­தீனின் முதல் பிரேத பரி­சோ­தனை விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த வைத்­தியர் ஆனந்த சம­ர­சே­கர அவ­ரது இரு உத­வி­யா­ளர்­க­ளுக்கும் எதிரான விசாரணை தொடர்பில் விளக்கம் கோரப்பட்டது. அந்த விசாரணைகள் வைத்திய சபையின் நியமங்களுக்கு அமைவாக உரிய சட்டவாதிகளின் பிரகாரம் இடம்பெறுவதாக நீதிவானுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து அவ்விசாரணைகளை துரிதப்படுத்த ஆலோசனை வழங்கிய நீதிவான் அந்த விசாரணை அறிக்கை மேலதிக விசாரணையில் தாக்கம் செலுத்தும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.தொடர்ந்து சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க தனக்கு அதிகாரம் இல்லை என குறிப்பிட்ட நீதிவான் நிசாந்த பீரிஸ் மேல் நீதிமன்றை நாடி பிணை தொடர்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவித்து விசாரணைகளை எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். அதுரை சந்தேக நபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.