வௌ்ளை சீனி மற்றும் கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கம்

248 0

வௌ்ளை சீனி மற்றும் கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலைகளை நீக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

வௌ்ளை சீனிக்கான 93 ரூபா , தோலுடன் கூடிய கோழி இறைச்சிக்கான 410 ரூபா மற்றும் தோல் அகற்றப்பட்ட கோழி இறைச்சிக்கான 490 ரூபா ஆகிய கட்டுப்பாட்டு விலைகளே இவ்வாறு இன்று முதல் நீக்கப்படவுள்ளன.

இதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் இன்று பிற்பகல் வௌியிடப்படும் என அறிக்கையொன்றை வௌியிட்டு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.