ஹெரோயினுடன் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் ஒருவர் கைது

405 0

10 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் கொழும்பு – கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் சந்தேகத்துக்குரிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொட்டாஞ்சேனை கொலேஜ் வீதியில் வைத்து அவர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 1.3 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் ஹெரோயின் விற்பனை ஊடாக பெற்றுக் கொண்ட 60 ஆயிரம் ரூபா பணமும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.