மாலைத்தீவின் ஆசிரியர்களுக்கு இலங்கையில் பயிற்சி

357 0

மாலைத்தீவின் ஆசிரியர்களுக்கு இலங்கையில் பயிற்சிகளை வழங்குவதற்கு கல்வி அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இதனைத் தெரிவிதுள்ளார்.

இதுதொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றிலும் கைசாத்திடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் மாலைத்தீவின் கோரிக்கைக்கு அமைய தேசிய கல்வி நிறுவனத்தின் ஊடாக இந்த திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.