தமிழக கடற்றொழிலாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
புதுடில்லியில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கோபால் பக்லே இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் உள்ள மனிதாபிமான அம்சத்தைக் கவனத்திற் கொண்டு துரிதமாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.
தமிழக கடற்றொழிலாளரான பிரிட்ஜோ கடந்த திங்கட்கிழமை கடற்றொழிலில் ஈடுபட்டபோது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

