நாடாளுமன்றத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் ஏற்படுத்திய குழப்பம் காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் செயற்பாட்டு தலைவராக டளஸ் அலகப்பெருமவை நியமிக்க அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் இன்றும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இதன்போது அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் இன்று விவாதிக்கப்படவிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிநபர் பிரேரணைகளும் விவாதிக்கப்படவில்லை.
இதனையடுத்து சபையை இந்த மாதம் 21ஆம் திகதி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

