தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் வசித்துவரும் இலங்கையர்கள் நாடு திரும்பும் விடயத்தில் இரட்டைப் மனப்போக்கை கொண்டிருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட யுத்தம் உள்ளிட்ட அசாதாரண நிலைகாரணமாக பெருமளவான இலங்கையர்கள் இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர்.
இவர்களை தற்போது நாடு திரும்ப செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இருந்த போதிலும் அதில் அவர்கள் குழப்பமான மனநிலையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் சமாதானத்தின் நிச்சயமற்ற தன்மை மற்றும் இலங்கையில் இருந்து மேலும் பலர் அகதிகளாக செல்லுதல் போன்ற விடயங்கள் தமிழகத்தில் அகதிகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

